விருதுநகர் மாவட்டம் லட்சுமிநகர் 3-வது தெரு பகுதியில் உள்ள ஓடை நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் குப்பைகள் அதிகளவில் தேங்கி கிடக்கின்றது. இதனால் இந்த ஓடையை கடந்து செல்லும் பொதுமக்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் இதில் எழும் துர்நாற்றத்தால் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பருவமழையை கருத்தில் கொண்டு மழைநீர் தடையின்றி செல்ல மேற்கண்ட ஓடையை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?