நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையத்தில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் சாலையில் ஏராளமான துணிகடைகள் நகைக்கடைகள் பல வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த சாலையில் இடதுபுறம் மழைநீர் ஓடை அமைத்து, அதன்மீது பாதசாரிகள் வசதிக்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வலதுபுறம் சாலையோரத்தில் இருந்த மழைநீர் ஓடை தூர்ந்துபோய் மண் அடைத்து காணப்படுகிறது. இதனால் மழை பெய்யும்போது ஓடையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் பாய்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, தூர்ந்துபோன மழைநீர் ஓடையை தூர்வாரி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராசிக், கோட்டார்.