நாகர்கோவில் சுங்கான்கடை பொதிகை நகர் உள்ளது. இந்த பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் கொசுக்கள் மற்றும் காய்ச்சல் பாதிப்பு மற்றும் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி பொதிகை நகர் பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர் வடிந்தோட வடிகால் ஓடை வசதி ஏற்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அனி நதிஷா, சுங்கான் கடை.