மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா வண்டாரி பஸ் நிறுத்தம் அருகில் கடந்த சில நாட்களாகவே சாலையில் அதிக அளவில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இச்சாலையில் செல்லும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பஸ் நிறுத்தம் வரும் பயணிகள் துர்நாற்றத்தால் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் அதிகளவில் இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்.