பாதாள சாக்கடை தொட்டி அமைக்க வேண்டும்

Update: 2026-10-25 16:20 GMT

திருச்சி மாநகராட்சி 4-வது மண்டலம் 63-வது வார்டு அய்யப்ப நகரில் பல வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்புக்கான தொட்டிகள் அமைக்கப்படாமல் உள்ளன. மாநகராட்சி நிர்வாகம் வைப்பு தொகை வசூலித்து வரும் நிலையில், தொட்டிகள் அமைக்கப்படாததால் அப்பகுதி மக்கள் இணைப்பைப் பெற முடியாமல் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விடுபட்ட வீடுகளை கணக்கெடுத்து எஞ்சிய பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்