கரூர் மாவட்டம் வெங்கமேடு அம்மன் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாயின் ஒரு பகுதி சிதிலமடைந்துள்ளதால் கழிவுநீர் தெருவில் வழிந்தோடுகிறது. தற்போது மழை பெய்யும் போது மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த கழிவுநீர் கால்வாயைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.