ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜம்பட்டி அருந்ததியர் நகரில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு உரிய சாக்கடை வசதி செய்து தரப்படவில்லை. இதன் காரணமாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பிரதான சாலையில் வெளியேற்றப்படுகிறது. இதனால் பென்னாகரம்-ஏரியூர் பிரதான சாலையில் ஆறுபோல ஓடும் சாக்கடை நீரால் துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. நோய் பரவும் அபாயமும், துர்நாற்றமும் ஏற்பட்டுள்ளது.