தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு ஆர்.பி.எஸ். தெருவில் நீண்ட நாட்களாக குடிநீர் தொட்டிக்கு அருகாமையில் திறந்த வெளியில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால் இங்கு தண்ணீர் பிடிக்க வரும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை ஆய்வு செய்து கழிவுநீர் கால்வாய் மீது சிமெண்டு சிலாப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.