உடுமலையில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. அதில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்களும் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.