ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பு

Update: 2026-11-01 14:30 GMT

குமாரபாளையம் அருகே கொக்கராயன்பேட்டை காவிரி ஆற்றில் இரவு நேரங்களில் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை கலக்கின்றனர். இதனால் ஆற்று நீர் முற்றிலும் நிறம்மாறி, துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகமும், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளும் உடனடியாக ஆற்றில் கழிவுநீர் கலக்கும் சாயப்பட்டறை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்