தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-11-01 09:27 GMT

பல்லடம்-மங்கலம் ரோட்டில் விநாயகர் கோவில் அருகே கால்வாயில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் அதிகரித்து நோய் பரவும் அபாயம் உள்ளது. நகர் முழுவதும் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. போதுமான துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் நகராட்சி முழுவதும் சுகாதாரப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நகராட்சி பகுதியில் துப்புரவு பணியாளர்களை கூடுதலாக நியமித்து நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பாரதிதாசன், பல்லடம்.

மேலும் செய்திகள்