சாலையில் பாயும் கழிவுநீர்

Update: 2026-11-01 12:37 GMT

வட்டக்கோட்டையில் இருந்து தலக்குளம் செல்லும் நெடுஞ்சாலையில் வடுகன்பற்று கூண்டு பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வடக்கு புறம் கொட்டாரம் ஊரில் இருந்து வரும் ஓடையில் கழிவுநீரானது போக வழியின்றி சாலையில் பாய்கிறது. பின்னர் அந்த பகுதியில் உள்ள வடுகன்பற்று கோவில் தெப்பக்குளத்தில் பாய்கிறது. இதனால் குளத்தின் நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள்ள பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையில் கழிவுநீர் பாய்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்