ஆபத்தான குழி

Update: 2026-11-01 15:16 GMT

ஈரோடு முனிசிபல் காலனியில் சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட உடைப்பால் கழிவுநீர் வெளியேறி சாலையில் சென்றது. இதனால் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதை சரிசெய்வதற்காக குழி தோண்டினார்கள். அதன்பின்னர் கழிவுநீர் வெளியேறுவது நின்றது. ஆனால் தோண்டப்பட்ட இடத்தை அப்படியே போட்டு விட்டனர். இதனால் ஆபத்தான குழியாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அந்த குழியில் பலர் விழுந்து காயம் அடைகின்றனர். இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்