கம்பம் அருகே உலக தேவர் தெருவில் உள்ள சாக்கடை கால்வாய் பாலத்தின் மூடி சேதமடைந்துள்ளது. இதனால் சாக்கடை கால்வாய் திறந்த நிலையில் இருக்கிறது. மேலும் அந்தவழியாக செல்லும் குழந்தைகள், முதியோர்கள் தவறி குழிக்குள் விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே சாக்கடை கால்வாயில் பாலம் அமைக்க வேண்டும்.