வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. சாலை அருகே 2-வது குறுக்கு தெருவில் உள்ள கால்வாயின் மேல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைபாதை கால்வாயில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் தவறி விழாமல் இருக்க இரும்புத்தகடுகளாலான ஷீட்டு கொண்டு மூடப்பட்டுள்ளது. ஆனால் அதிலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே விபரீதம் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுப்பார்களா?
-பாலாஜி, வேலூர்.