அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தாலுகா, வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் மாதா கோவில் பின்புறம் உள்ள உள்விளையாட்டு அரங்கில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளவும், பொதுமக்கள் நடைபயிற்சி செய்யவும் முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, அப்பகுதியில் மழைநீர் தேங்காமல் வெளியேறுவதற்கு வடிகால் கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.