அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் மழைக்காலங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாவதோடு, தேங்கும் தண்ணீரில் கொசு உற்பத்தியாகி நோய்த்தொற்று வரவும் அபாயம் உள்ளது. எனவே, தேங்கும் மழைநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.