நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2026-11-15 08:38 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், அண்ணாசாலையில் கழிவுநீர் வடிகால் ஒன்று குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசுவதோடு, நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இந்த நீண்ட நாள் பிரச்சினைக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா? என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்