ஓசூர் மாநகராட்சி 45-வது வார்டில் சிப்பாய்பாளையம் பகுதி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்தநிலையில், சிப்பாய்பாளையம் பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் சாக்கடை கழிவுநீர் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக மழை காலங்களில் சாக்கடை கழிவுநீர் மழைநீருடன் கலந்து சாலையோரம் ஓடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக பொதுமக்கள் பலமுறை கவுன்சிலரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.