திருச்சி மாநகராட்சி 16-வது வார்டுக்கு உட்பட்ட லட்சுமிபுரம் 2-வது தெருவில் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள காலி மனைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாவதுடன், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. எனவே, காலி மனைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி, சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.