ஈரோடு தில்லைநகரில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. மேலும் கால்வாயின் ஒரு முனையில் தடுப்பும் வைக்கப்பட்டுள்ளதால் குப்பைகளும், கழிவுநீரும் அந்த பக்கம் செல்ல இயவில்லை. இதனால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது.