புஞ்சைபுளியம்பட்டி அருகே புதூர் ஊராட்சிக்குட்பட்ட நொச்சிபாளையத்தில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் வீதிகளில் ஓடி வருகிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.