சென்னை கொரட்டூர், 61-வது தெருவில் பூங்கா ஒன்று உள்ளது. அங்குள்ள கழிவறையில் செப்டிக் டேங்க் மூடி சேதமடைந்து உள்ளது. இதனால் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பூங்காவுக்கு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மூக்கினை மூடிக்கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.