பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் மருவத்தூர் கிராமத்தின் தெற்கு தெருவில் கழிவுநீர் செல்ல போதிய வசதி இல்லாமல் கழிவுநீர் பொது இடங்களில் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் தேங்குவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளதுடன், பொதுமக்களும் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் புதிய கழிவுநீர் வாய்க்கால் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.