ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடக்கும் பகுதியில் சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே கால்வாயை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.