கரூர் மாவட்டம், பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டி.செல்லாண்டிபாளையத்தில் கழிவுநீர் வாய்க்காலில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் மற்றும் குப்பைகள் தேங்கியுள்ளன. இதனால் கழிவுநீர் செல்லாமல் பாலத்திற்கு முன்பே தேங்கி, பச்சை நிறமாக மாறி கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுநீர் வாய்க்காலை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.