சேலம் ரத்தினசாமிபுரம் 40 அடி ரோட்டில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால் அதை முறையாக தூர்வாராததால் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர வேண்டும்.