கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட அரியநாயகிபுரம் ஊராட்சி, அச்சம்பட்டி கிராமத்தில் உள்ள ரேஷன் கடை அருகில் வாறுகால் வசதி இல்லாததால் கழிவுநீர் தெருக்களில் பாய்ந்தோடுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க வாறுகால் வசதி செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.