தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகா கோவிலடி கிராமத்தில் அப்பால அரங்கநாதர் திருக்கோவில் அமைந்து உள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஒரு கோவிலாகும். இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.இந்த நிலையில் கோவில் அருகே கழிப்பறை கட்டப்பட்டு உரிய பராமரிப்பு இன்றி உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தரகள், குழந்தைகள் அவதிபடுகிறார்கள். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கழிப்பறை வசதி அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் பூதலூர்