பழனி பழைய தாராபுரம் ரோடு ராஜாஜி தெருவில் தூர்வாரப்பட்ட சாக்கடை கழிவுகள் சாலையோரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரகேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.