கழிவுநீர் கால்வாய் மூடப்படுமா?

Update: 2026-09-27 16:18 GMT

பர்கூர்-கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பர்கூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு தினமும் பல்வேறு பணிகளுக்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் வந்து செல்கின்றனர். இந்த அலுவலகம் முன்பு செல்லும் கழிவுநீர் கால்வாய் மீது சமீபத்தில் பேவர் பிளாக் அமைக்கப்பட்டது. இது முறையாக அமைக்கப்படாததால் கழிவுநீர் கால்வாயில் திடீரென குழி ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதில் விழுந்து விபத்துக்குள்ளாகும் அவலம் உள்ளது. எனவே காலதாமதம் இன்றி தரமான பேவர் பிளாக் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்