நெல்லை மேலப்பாளையம் முதல் ரெட்டியார்பட்டி வரை செல்லும் சாலையில் தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெறுகிறது. இதனால் வெளியூரில் அலுவலகம் முடிந்து இரவில் வீடு திரும்புபவர்கள், வெளியே செல்பவர்கள் என பலரும் அவதியடைந்துள்ளனர். விரைவில் இந்த பணிகள் முடிக்கப்படுமா? என எதிர்பார்க்கிறோம்.