திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கிருஷ்ணசமுத்திரம் கிராமம் 2-வது வார்டு குமரேசபுரம் காலனி பகுதியில் சாக்கடை கால்வாயில் மண்கள் நிரம்பி கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுவதுடன், நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.