அண்ணாமலை நகர் பேரூராட்சியில் கே.ஆர்.எம். நகர் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பறை சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி, அதனை பயன்படுத்தும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. அப்பகுதி மக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுகழிப்பறையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.