திருச்சி மாவட்டம் லால்குடி அகிலாண்டேஸ்வரி நகர் 11-வது வார்டு பகுதியில் சாக்கடை வடிகால் வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி நிற்பதுடன் புதர்கள் மண்டிக்கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி, துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி வாய்க்காலை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.