பூதப்பாண்டி அருகே உள்ள வடக்கு மார்த்தாள் பகுதியில் தெருவோரத்தில் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையை முறையாக பராமரிக்காததால் மண் மூடி செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் கழீவுநீர் பாய்தோட வழியின்றி நடைபாதையில் பாய்கிறது. மழை காலங்களில் அந்த தெருவின் வழியாக பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத வகையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முகம்மது ரபீக், திட்டுவிளை.