‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2026-08-30 13:33 GMT

கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டி நேருநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்காக அமைக்கப்பட்ட கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யப்படாமல் கழிவுநீர் தேங்கி நின்றதால், கொசு உற்பத்தியாகி குடியிருப்புவாசிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் இதுகுறித்து செய்தி வெளியானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தூய்மை பணியாளர்களை கொண்டு கழிவுநீர் வாய்க்காலை சுத்தம் செய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்