தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-08-30 14:03 GMT

உடுமலை சாதிக் நகர் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை கொண்டு செல்லும் வகையில் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இதில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவுகிறது. எனவே கால்வாயை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


மேலும் செய்திகள்