சேலம் மாநகராட்சி 26-வது வார்டு அங்கம்மாள் காலனி அருகே உள்ள கன்னி தெரு பகுதியில் சாக்கடை கால்வாய் உடைந்து கழிவுநீர் செல்வதற்கு வழி இல்லாமல் தேங்கி நிற்கிறது. துர்நாற்றமும், கொசுத்தொல்லை போன்ற பல பிரச்சினைகளும் இந்த தெரு முழுவதும் உள்ளன. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய் பிரச்சினையை தீர்வுக்கு கொண்டு வர வேண்டும்.