கால்வாயில் தேங்கும் கழிவுநீர்

Update: 2026-08-30 17:05 GMT

பழனியை அடுத்த பெரியப்பா நகரில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேற முடியாமல் கால்வாயிலேயே தேங்குவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுப்புழுக்கள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. அத்துடன் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைவாக தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்