கடலூர் புதுக்குப்பம் பகுதியில் கழிவுநீா் கால்வாய் சேதமடைந்துள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் அச்சப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை விரைந்து சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோாிக்கை விடுத்துள்ளனர்.