ஏரியூர் அருகே உள்ள ஏர்கோல்பட்டியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதன் காரணமாக ஏரியூர்-மேச்சேரி பிரதான சாலைகளில் ஆறு போல சாக்கடை கழிவுநீர் ஓடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடும், நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு சாக்கடை கால்வாய் வசதி அமைக்கலாமே!