வெண்ணந்தூர் ஒன்றியம் ஆலம்பட்டி பஞ்சாயத்து மேட்டு மிஷின் செல்லும் சாலையில் உள்ள அருள் ஜோதி நகர் பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும், குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் மழைநீருடன் கலந்து தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம் முறையான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.