கோவை சின்னவேடம்பட்டி குறிஞ்சி நகரில் கால்வாய் ஒன்று உள்ளது. இந்த கால்வாயில் கட்டிட கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள், மரத்துண்டுகள் அடைத்து உள்ளது. இதனால் கழிவுநீர் வழிந்தோட முடியாத நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. மேலும் மழை பெய்தால் கழிவுநீர் வெளியேறி பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளது. எனவே அந்த கால்வாயை உடனடியாக தூர்வார அதிகாரிகள் முன்வர வேண்டும்.