செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், வேலுநாச்சியார் தெருவில் பல குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகால் முழுவதும் திறந்தநிலையில் உள்ளது. மேலும் அதன் பகுதிகள் சேதமடைந்து உள்ளதால், கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.