அலங்காநல்லூரில் இருந்து மதுரைக்கு செல்ல காலை மற்றும் மாலை நேரத்தில் போதுமான பஸ்வசதி இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். ஒரு சிலர் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே மேற்கண்ட வழித்தடத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக பஸ் இயக்கப்படுமா?