உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரத்தில் உள்ள ரேஷன் கடை மற்றும் தனியார் பள்ளி அருகே பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி வருகிறது. மேலும் சமீபத்தில் பெய்த மழைநீரும், கழிவுநீருடன் கலந்து தெருவில் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.