அஸ்தம்பட்டி பகுதிக்கு உட்பட்ட 29-வது வார்டு கோர்டு ரோடு காலனியில் முறையாக சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படுவதில்லை. இதனால் அப்பகுதியில் வீடுகளின் அருகே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.