விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி வெம்பக்கேட்டை ஒன்றியம் வெற்றிலையூரணி பஞ்சாயத்து ஒண்டிவீரன் காலனி பகுதியில் போதிய வாறுகால் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் செல்ல போதிய வழியின்றி அவ்வப்போது சாலையில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியினருக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதியில் வாறுகால் வசதி ஏற்படுத்திதர நடவடிக்கை எடுப்பார்களா?