சுகாதார சீர்கேடு

Update: 2026-08-16 13:30 GMT

கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை மேம்பாலம் அருகே மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்திற்கு தினசரி நூற்றுக்கணக்கான நபர்கள் காலை, மாலை நடைபயிற்சி செய்யவும், வீளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளவும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ராயக்கோட்டை சாலையில் இருந்து விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் இணைப்பு சாலையில் இருபுறமும் கழிவுநீர் வாய்க்கால் உள்ளது. இதில் ஒரு புறத்தில் கழிவுநீர் எப்போது பார்த்தாலும் தேங்கி நிற்கிறது. எனவே அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் நிலவி வருகிறது. எனவே இங்கு கழிவுநீர் தேங்காமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ்வசதி